/* */

ரூ 90 .17 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் அபுதாபியில் இருந்து ரூ 90 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ரூ 90 .17 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த பயணி கைது
X

சென்னை விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த தங்கம்.

அபுதாபியிலிருந்து எத்தியாடு ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது விமானத்தில் வந்த தஞ்சாவூரை சோ்ந்த 32 வயது ஆண் பயணி,தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றாா்.ஆனால் சுங்கத்துறையினருக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து வெளியே சென்ற தஞ்சாவூா் பயணியை மீண்டும் விமானநிலையத்திற்குள் அழைத்து வந்து,அவா் வைத்திருந்த 2 பெரிய சூட்கேஸ்களை திறந்து பாா்த்து சோதனையிட்டனா்.சூட்கேஸ் பீடிங்கிற்குள் தங்கத்தினால் ஆன தங்க ஒயா்கள் 4 சுருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனா்.

அந்த தங்க ஒயா்களின் மொத்த எடை 2.06 கிலோ.அதன் மதிப்பு ரூ.90.17 லட்சம்.இதையடுத்து தங்க ஒயா் சுருள்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை தஞ்சாவூா் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 7 Nov 2021 5:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  3. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு