மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா..!

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா..!
X

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகக்குழு கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சி கூட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர்.மகேந்திரன், எம்.முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ்(ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமாரவேல், சேகர், சுரேஷ்அய்யர் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

இவற்றை ஏற்றுக் கொள்வதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் தலைவரே முடிவு செய்யட்டும் என தெரியப்படுத்தினார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா கடிதங்களை தலைவர் விரைவில் பரிசீலனை செய்வார் என்று கட்சி சார்பில் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!