தேர்தல் அதிகாரியிடம் கமலஹாசன் புகார்
தமிழகம் முழுவதிலும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டைனர் லாரிகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூமாக இருக்க வேண்டும் எனவும் அடிக்கடி சிசிடிவி கேமரா துண்டிக்கப்படுவதும், கண்டெய்னர் லாரிகள் வந்து செல்வதும், wi-fi வசதிகள் மர்மமான முறையில் இருப்பதும், மர்ம நபர்களின் நடமாட்டம் அடிக்கடி இருப்பதும் மக்களிடையே பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற சந்தேகம் எழுந்தால் மக்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் எனும் தன்மை குறைந்துவிடும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்.
எனவே அங்கு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் நியாயமாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும் எனவும் கமல் அவர்கள் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஓட்டு எண்ணும் மையங்களின் அருகே அறிவிக்கப்படாத கட்டட பணிகள் துவங்குவதும், திடீரென மாணவர் நடமாட்டம் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே தங்களுக்கு நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இதனை திரட்டி கொண்டு வந்து வைப்போம் எனவும், இது தங்களது ஜனநாயகத்தைக் காக்கும் முயற்சிகளில் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu