அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது : ககன்தீப் சிங் பேடி
சென்னை மாகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி( பைல் படம்)
சென்னை ராயப்பேட்டையில் பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நகரை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என அறிவுறுத்திய அவர், சுவரொட்டிகள் ஒட்டுவதால் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக கூறினார்.
சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுப்பது நோக்கமல்ல என்றும் வேண்டுகோள் விடுக்கவே விரும்புவதாகவும் கூறினார். மேலும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அந்த பணிகளை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவுசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu