நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிப்பு

நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிப்பு
X
நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகளும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட செந்தில், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future