மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி : முதல்வர் அதிரடி அறிவிப்பு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இன்று வெளியிட்ட உத்தரவு: செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!