கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் அறிவிப்பு

கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அந்த தகவல் உண்மை எனில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டை போடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்து 749 பணியாளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனக்கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu