தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறைந்து வருகிறது : அமைச்சர் மா. சுப்ரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறைந்திருப்பதாக மருந்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்..
சென்னை கீழ்பாக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,
தடுப்பூசி தட்டுபாட்டால் தமிழகத்தில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதாகவும், இதை கட்டுபடுத்த என்ன செய்வது என தெரியவில்லை என கூறினார்.
தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில்லை என்றும் ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டில் மத்திய அரசு கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசிகள் வழங்கியிருப்பதாகவும், மாதம் 2 கோடி தடுப்பூசி போடுவதற்கும் தமிழகத்தில் நிர்வாக கட்டமைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்..
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 100% தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், ஊட்டியில் உள்ள அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளல்களுக்கும், பழங்குடியினருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் பேசினார்..
தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாகவும், அதனால் தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்..
பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இன்று 80 ஆயிரம் தடுப்பூசிகள் தான் கையிருப்பிருந்ததாகவும், நாளைய தேவைக்காக பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி கிடங்கில் இருந்து 2.5 லட்சம் தடுப்பூசி பெற்றிருப்பதாகவும், இது மற்ற மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்..
தமிழகத்திற்கு ஜூலை 2-ம் தேதி தான் தடுப்பூசி வரும் என்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஐசிஎம்ஆர் அறிவித்த பின் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்..
தமிழகத்தில் கருப்பு பூஞ்சையின் தாக்கம் குறைந்துள்ளதாகவும், கரும்பூஞ்சை சிகிச்சைக்காக 7 ஆயிரம் படுக்கைகள் உள்ளதாகவும்,இதற்காக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கை அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்..
மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு யாரால் வந்தது என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu