ரூ70 கோடி மதிப்பில் அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவமனை சேவை
தமிழ்நாடு முதல்வரின் கிராமங்களில் 'இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்' இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் ஆம்புலன்ஸ் சிகிச்சைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாரத்தின் 6 நாட்களில் பல்வேறு கிராமங்களில் பரிசோதனை முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஐந்து பணியாக பணியாளர்களுக்கு இல்லம் தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கினார்.
களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகள் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் 45 வயதும், அதற்கு மேற்பட்ட உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், சிறுநீரக நோயாளிகளைத் பராமரித்தல் ,அத்தியாவசிய மருந்து சேவைகளுக்கு பரிந்துரைத்தல் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் ஆம்புலன்ஸ் சிகிச்சைத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதல்வரின் கிராமங்களில் 'இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம் மூலம் சென்னை, மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம், மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சிமுறையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் தலா ஒரு மருத்துவர், செவிலியர் ,மருத்துவ பணியாளர் பணியில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu