தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம்
X
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 2022 மார்ச் 31 தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை குறைக்கும் பொருட்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!