50% ஊழியர்களுடன் ஐகோர்ட் இயங்கும்: தலைமை பதிவாளர்

50% ஊழியர்களுடன் ஐகோர்ட் இயங்கும்: தலைமை பதிவாளர்
X
சென்னை உயர் நீதிமன்றம் இனி, 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்கும் என்று, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, வேகமெடுத்து வருகிறது. இதனால், மே 1ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளை இயங்கும் என்று, தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், நீதிமன்ற பணியாளர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 2 நாள் பணி தரப்படும் என்றும், தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!