இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு: தப்புவது எப்படி?

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு: தப்புவது எப்படி?
X
இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை, சென்னை நகரில் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க, போக்குவரத்துத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. சென்னையில் பகுப்பாய்வு செய்வதில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல், கடந்த 15ஆம் தேதி வரை இருசக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் . 844 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க, இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து இருப்பவருக்கும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, போக்குவரத்து காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, இந்த நடைமுறை, சென்னை நகரில் இன்று முதல் அமலாகி இருக்கிறது.

அதன்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர கூட அமரக் கூடிய நபர் மீது, மோட்டார் வாகன சட்டத்தின்படி, அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வாகன விதிகளை பின்பற்றி, பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிந்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க, சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!