தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன்  கூடிய  கனமழை: வானிலை மையம் தகவல்
X
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!