தமிழகத்தின் 2வது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும்: பேரவையில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ கோரிக்கை

தமிழகத்தின் 2வது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும்: பேரவையில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ கோரிக்கை
X

சட்டபேரவை கூட்டத்தொடரில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை வைத்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேசுகையில், தமிழகத்தில் நேர்மையான திறமையான அதிகாரிகளை தன் சிறப்பு செயலாளராக நியமித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வை காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினர் நலன் காத்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் அத்துடன் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!