தமிழகத்தில் மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள் பணியிட மாற்றம், தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள் பணியிட  மாற்றம், தமிழக அரசு உத்தரவு
X

பைல் படம்

தமிழகத்தில் ஆவடி, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை : தமிழகத்தில் ஆவடி, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிச்சந்திரன் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இணை இயக்குனராகவும்,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவக்குமார் ஆவடி மாநகராட்சி கமிஷனராகவும்,

* செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான் திருச்சி மாநகராட்சி கமிஷனராகவும்,

* திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சுல்தானா, சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் இணை இயக்குனராக இருந்த சரவணன் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இணை இயக்குனராக இருந்த விஜயலட்சுமி திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த விஜயக்குமார் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் இணை இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சரவணகுமார் தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராகவும்,

* சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த அசோக்குமார் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இணை இயக்குனராகவும்,

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார இணை இயக்குனராக இருந்த பாரிஜாதம் நகராட்சி நிர்வாக இணை இயக்குனராகவும்,

* திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன் உள்ளாட்சி குறைத்தீர்ப்பு செயலாளராகவும்,

* உள்ளாட்சி குறைத்தீர்ப்பு செயலாளராக இருந்த குபேந்திரன் வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* திருச்சி மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராகவும்,

* தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஜானகி தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!