தமிழக சட்டபேரவை முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: மநீம தலைவர் கமலஹாசன் வாழ்த்து

தமிழக சட்டபேரவை முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: மநீம தலைவர் கமலஹாசன் வாழ்த்து
X

சென்னை : தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது.

மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டதாவது: தமிழகத்தில் 16வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப் பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச் செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture