இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்: புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்: புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
X

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது. (பைல் படம்)

தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது. புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனை செய்யப்படவுள்ளது.

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.

தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் கூட்டத் தொடர் கடந்த 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது, இதைத் தொடர்ந்து, இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்