அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் பொருத்தும் பணி தொடக்கம் : அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 19,200 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. நாளை முதல் ஏசி பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் 10,000 நபர்கள் வேலைக்கு எடுக்க வேண்டியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு இது குறித்து ஆலோசிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் இலவச பயண டிக்கெட் தரப்படும் எனக் கூறினார்.
மேலும் டீசல் பேருந்துகளை விட 5 மடங்கு விலை அதிகமாக மின் பேருந்துகள் இருந்தாலும், அதன் பராமரிப்பு, டீசல் செலவு மிச்சமாகும் என தெரிவித்த அமைச்சர், அரசு பேருந்துகளில் திருக்குறள், உரையுடன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணி 10 நாட்களுக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu