/* */

சிங்கார சென்னை 2.0 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை ரிப்பன் மாளிகையில் சிங்கார சென்னை 2.0 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சிங்கார சென்னை 2.0 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
X

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி வாகனங்களின் செயல்பாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிங்கிவைத்தார். 

சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாகப் பராமரிக்க அழகுபடுத்தும் பணிகள், சுவரொட்டிகளை அகற்றுதல், நீண்ட நாட்களாகத் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுதல் போன்ற தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளைச் சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.6.24கோடி மதிப்பிலான 15 கனரக காம்பாக்டர் வாகனங்களும், வீடுகளுக்குச் சென்று குப்பைசேகரிக்கமூன்றுசக்கரவாகனங்களுக்குமாற்றாக ரூ.30.28 கோடி மதிப்பிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கரவாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியின் போது, சென்னை மாநகராட்சியில் பணியில் இருந்தபோது உயிரிழந்த 195 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தூய்மைப்பணியாளர், சாலைப்பணியாளர், பூங்காபராமரிப்பாளர், மலேரியா தடுப்புபணியாளர், காவலர் உள்ளிட்ட பல்வேறுபணியிடங்களுக்குப் பணி நியமனஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 20 வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த ரிப்பன் கட்டடத்தில் நுழையும் போது என்னுடைய நினைவு 1996 ஆம் ஆண்டிற்குச் சென்றுவிட்டது.1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மேயராக என்னைத் தேர்ந்தெடுத்து, அந்தப்பணியாற்றுவதற்கு சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.

நான் அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு, மேயர் என்றால் பெரிய அங்கி மற்றும் 100 பவுன்செயின் அணிந்து கொண்டு, செவர் லெட் காரில் செல்வது தான் பணியாக இருந்தது.அவற்றை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வது, விழாக்களுக்குச் செல்வது, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது, இதுதான் மேயருடைய பணியாக இருந்தது. அதை நான் மாற்றி மக்கள் பணியாற்றுவது தான் மேயருடைய பணி என அந்தக் கடமையைச் செய்தேன்.

இந்தச் சாலைவழியாக செல்லும்போதெல்லாம், இந்த ரிப்பன் கட்டடத்தை பார்த்துக் கொண்டு தான் செல்வேன். நான் 1996ஆம் ஆண்டு வெற்றி பெற்று மேயராகப் பொறுப்பேற்பதற்காக ஒருநிகழ்ச்சியை இதே கட்டடத்தில் நடத்தினோம்.அதற்கு அழைப்பிதழை தயாரித்து தலைவர் கருணாநிதியிடம் கொண்டு சென்றோம். அழைப்பிதழ் முதல் பக்கத்தில் தலைவர் எனக்குப் பொன்னாடை அணிவித்தது போன்ற ஒரு புகைப்படம்.கடைசி பக்கத்தில் ரிப்பன் கட்டடத்தின் தோற்றம்.அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

1996 ஆம்ஆண்டில் வெற்றி பெற்று நாம்ஆட்சிக்குவந்த போது, என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எல்லோரும் தலைவரிடத்திலே சொன்னார்கள்.தலைவர் என்னை அமைச்சர் ஆக்கவில்லை.நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை.

ஆனால் நம்முடைய தோழர்கள் சென்று கட்டாயப்படுத்தினார்கள். தலைவர் முடியாது என்று கூறிமறுத்து விட்டார்கள்.ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் சென்னை மேயர் பொறுப்புக்கு நான் போட்டியிட்டு, மக்களுடைய வாக்குகளைப்பெற்று, மேயராகக் கூடிய முதல் மேயராக நான் அன்றைக்குப் பொறுப்பேற்றேன்.

அந்தக்கட்டடத்தை பார்த்துத் கருணாநிதி சொன்னார், எல்லோரும் சேர்ந்து சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சின்ன அறையில் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை இந்தப் பெரிய கட்டடத்தில் உட்காரவைத்திருக்கிறேன் என்று பெருமையாகச் சொன்னார்.

நான் பொறுப்பேற்றபோது சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்ற வாசகத்தைச் சொல்லி அப்பணியில் நாங்கள் ஈடுபட்டோம்.இப்போது சிங்காரச் சென்னைமட்டுமல்ல சென்னை 2.0 என்ற வகையிலே பலதிட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இந்தச் சென்னையை பொறுத்தவரை 3 நாடாளுமன்றஉறுப்பினர்கள், 22 சட்டமன்றஉறுப்பினர்கள் இந்த மாநகராட்சிக்கு உட்பட்டுஇருக்கிறார்கள்.இந்த 22 சட்டமன்றஉறுப்பினர்களையும், 3 நாடாளுமன்றஉறுப்பினர்களையும், அதைப் போலஅமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிற நேரு அதிகாரிகளாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய சிறப்பு அதிகாரிகளையும்,

நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ளவிரும்புவது, டெல்லி, மும்பை, கொல்கெத்தா சொல்லக்கூடிய அந்த வரிசைப்பட்டியலில் சென்னையும் இருக்கிறது. சென்னைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையிலே ஏற்கனவே உள்ளாட்சித்துறையினுடைய மானியத்தில், நகராட்சி நிர்வாகத்துறை மானியத்தில் அமைச்சர் சட்டமன்றத்தில் பதிலளித்துப் பேசுகின்ற போது அங்கே இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல சென்னையில் இருக்கக்கூடிய மக்களுக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இவையெல்லாம் உடனடியாக நிறைவேற்றுகிற அந்த முயற்சியிலே ஈடுபடவேண்டும் என்று நான் அவர்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்தநிகழ்ச்சியில்,நகராட்சி நிர்வாகத்துறை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன்,கலாநிதி வீராசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Sep 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!