கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக். 

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளா மாநிலத்தில், கேரளா மாநில எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் ஷான் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக், சமூக தொண்டாற்றி வந்த நிர்வாகி ஷானை கொடுரமான முறையில் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். பாசிச பயங்கரவாதிகள் தங்கள் நிர்வாகியை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரளா அரசும், மத்திய அரசும் , இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். பாசிச சக்திகளை கட்டுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கூறிய அவர், மரணத்திற்க்கு நீதிகிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!