பாளையங்கோட்டை சிறை மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி, முதல்வர் அறிவுப்பு

பாளையங்கோட்டை சிறை மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி, முதல்வர் அறிவுப்பு
X

பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துமனோ என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 7 பேர் கொண்ட சக கைதி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முக ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறை பணியாளர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!