நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
X

சென்னையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டம்

நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நீர்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் செயலாக்கம், பணிகளின் முன்னேற்றம் மற்றும் புதிய திட்டங்களை உருவாக்குதல் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் செப்பனிடுதல் புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நடைபெறும் புனரமைப்பு பணிகள்,

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் மற்றும் அணைகள் புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, அரசு சிறப்பு செயலாளர் அசோகன், முதன்மைத் தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கோவை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணன், தலைமை பொறியாளர் (திட்ட உருவாக்கம்) பொன்ராஜ், இணை முதன்மைத் தலைமை பொறியாளர் சுரேஷ்குமார், ராணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil