உணவகங்களில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக, சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
பின்னர் மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அனைத்து உணவகங்களிலும் உணவு மற்றும் பானங்கள் விற்பனைக்கு சேவை வரி முதலில் விதிக்கப்பட்டது. பின் குளிர்சாதன வசதி உள்ள ஓட்டல்களுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டது. உணவுக்கான மூலப்பொருட்களை தயாரிப்பது அவற்றை வாங்குவது உணவை தயாரிப்பது இவற்றுக்கு எல்லாம் வரி விதிப்பு பொருந்தாது.
எனவே ஓட்டல்களில் இருந்து பார்சல்களில் உணவு மற்றும் பானங்கள் எடுத்து செல்வதற்கு சேவை வரி பொருந்தாது. சேவை வரித்துறை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu