வீர மரணமடைந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாய், முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாய், முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.
X

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ இருபது லட்சம் நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ 20 இலட்சம் ரூபாயை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை : இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ 20 இலட்சம் ரூபாயை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயை வழங்கினார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் ழி.பாலமுருகன் அவர்களுடைய தாய் குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சந்தோஷ் அவர்களுடைய தாய் சித்ரா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மறைந்த படை அலுவலர் ஆனந்த் மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சபரிநாதன், தாய் .மனோன்மணி ஆகியோர் நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!