மகப்பேறு விடுமுறையில் பாகுபாடு கூடாது, சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

மகப்பேறு விடுமுறையில் பாகுபாடு கூடாது,  சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
X

பைல் படம்

மகப்பேறு விடுமுறை வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பகாலங்களில் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 270 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறை செய்யப்படாத ஊழியர்களுக்கும் இடையே அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!