விவசாயிகள் கடன் பெற தடையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

விவசாயிகள் கடன் பெற தடையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
X

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 

விவசாயிகள் கடன் பெற தடையில்லை என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.12 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!