சோளிங்கர் எம்எல்ஏ மனைவி மரணம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சோளிங்கர் எம்எல்ஏ மனைவி மரணம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
X

சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம் முனிரத்தினம் அவர்களின் மனைவி மரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.எம் முனிரத்தினம். இவருடைய மனைவி உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

இவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில், "காங்கிரஸ் கட்சியை சார்ந்த சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு ஏ எம் முனிரத்தினம் அவர்களது துணைவியார் திருமதி கலைவாணி அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

கடந்த பல நாட்களாக சிறுநீரக பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரை இழந்து வாடும் திரு எம் முனிரத்தினம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!