/* */

சென்னையில் தண்ணீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்தில் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் தண்ணீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
X

வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டாய் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அருகில் எம்பி தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட யானைகவுனி பகுதியில் உள்ள மேம்பாலம் மாநகராட்சி பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டாய் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், துறைமுகம் தொகுதியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், மழைக் காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எந்த அளவில் இருக்கிறது என்கிற அடிப்படையில் இன்று ஆய்வு பணிகளை பார்வையிட்டேன்.

ராயபுரம் அங்கப்பன் சாலையில் உள்ள பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்ற நிலையில், பள்ளிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறினார். எனவே உடனடியாக அந்த இடம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் வாலடாக்ஸ் சாலையில் யானைகவுனி பகுதியில் உள்ள நயினார் பாலம் மேம்பாட்டு பணிகளை விரைவு படுத்தவும், அங்குள்ள மக்களுக்கு மாற்று இடம் அளிக்கும் வகையில் ஆய்வு நடத்தப்படும்.அங்குள்ள கால்வாய் தூர்வாரப்பட்டு மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டகையில், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்து உள்ளனர். தற்போது இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி உதவிடன் இந்த இடம் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்படும் திட்டங்களுக்கு இந்த இடம் மாற்றப்படும்.

கடந்த ஆட்சியை போன்று இல்லாமல் இந்த ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டுள்ளது என்றும், மழைக்காலத்தில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெரும்பாக்கம் பகுதியில், மாநகராட்சி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் மழைக்காலத்தில் அங்கே தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், ஓட்டேரி உள்ளிட்ட மின் மயானங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பது குறித்து ஏற்கனவே புகார் வந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 9 Oct 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?