மேகதாது அணை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டம், தலைவர்கள் கருத்து

மேகதாது அணை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டம், தலைவர்கள் கருத்து
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)

மேகதாது அனை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கலந்து கொண்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொங்கு ஈஸ்வரன்

அணை கட்ட வாய்ப்பு கிடையாது.கர்நாடகத்தின் முதல்வரின் பதவி தடுமாற்றத்தில் உள்ளதால் இந்த விவகாரத்தை கொண்டு திசை திருப்புகிறார்.அரசு ஒரு போதும் அனுமதிக்காது. உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் கருத்து கேட்காமல் செயல்படுத்த கூடாது என உத்தரவு அளித்துள்ள போதும் அணையை கட்டுவோம் என சொல்கிறார். யார் கொடுத்த தைரியத்தில் இப்படி பேசுகிறார் என் உற்று நோக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேட்டி:

மேகதாது அணை என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல். இன்று மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து நமக்கு கிடைப்பது வெள்ள பெருக்கினால் கிடைக்கக்கூடிய உபரி நீர் மட்டுமே. மேகதாதுவில் அணை கட்டினால் அந்த நீரும் வராது. இந்த அணை கட்டும் முயற்சியை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.

வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமை கட்சி

சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. காவிரி நீர் பிரச்சனைகளின் போது தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள்.

இதை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கண்டிப்பாக மேக தாடுவில் அணைக்கட்ட விட கூடாது. இன வெறியர்களை ஓடுக்க வேண்டும் போர்க்கால அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil