கொண்டித்தோப்பில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார்!

கொண்டித்தோப்பில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார்!
X

 கொண்டிதோப்பில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். 

கொண்டித்தோப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமினை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலில் தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தடுப்பு முகாமில் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை துறைமுக சட்டமன்ற உறுப்பினரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு துவக்கி வைத்தார்.

கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து குரானா தடுப்பூசியை போட்டுச் சென்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!