சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேர் நியமனம் -தமிழகஅரசு அறிவிப்பு..!

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேர் நியமனம்  -தமிழகஅரசு அறிவிப்பு..!
X

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்களும் தமிழக அரசு நியமித்து உள்ளது. மேலும் ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் இயங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் எனவும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!