உள்ளாட்சித்துறையின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு : சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

உள்ளாட்சித்துறையின்  தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு : சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
X

பைல் படம்

தமிழக சட்டசபையில் உள்ளாட்சித்துறையின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யது மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தனி அலுவலர் பதவி காலத்தை ஆறு மாதம் நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தனி அலுவலர் பதவி காலத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தனி அலுதுைவலர் பதவி காலம் நீடிக்கப் படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதமும், புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் பேரவையில் இன்று தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!