திருமணங்களுக்கு செல்ல விரைவில் மீண்டும் 'இ - பதிவு' முறை அனுமதி

திருமணங்களுக்கு செல்ல விரைவில் மீண்டும் இ - பதிவு முறை அனுமதி
X
தமிழகத்தில் திருமணங்களுக்கு செல்ல வசதியாக மீண்டும் 'இ - பதிவு' முறையை தமிழக அரசு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ அவசரம், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரணங்களுக்கு மட்டும், இ - பதிவு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கிய பிறகும், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்கான, இ - பதிவு வசதி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. விரைவில் பொதுப்போக்குவரத்து அரசு அனுமதி வழங்க உள்ள நிலையில் ஜூன், ஜூலையில் ஏராளமான முகூர்த்த தினங்கள் இருப்பதால் திருமண வீட்டை சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு செல்ல வசதியாக தற்காலிமாக நிறுத்தப்பட்ட திருமணங்களுக்கான, 'இ - பதிவு' வசதி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்