சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்
கோப்பு படம்
தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதன்படி, தெற்கு ரயில்வேயின் பிரதான ரயில் நிலையங்களில், துாய்மை பாதுகாப்பு குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை, சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் நிலையத்தில், தெற்கு ரயில்வே தலைமையக பொது மேலாளர் ஜான் தாமஸ் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர்கள் ஆனந்த், சச்சின் புனிதா, சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிரசாரத்தில், நிலையங்களையும் ரயில்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள பயணியரின் ஒத்துழைப்பு அவசியமானது. ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கண்காட்சியும் நடத்தப்பட்டது. வரும், 30ம் தேதி வரை என, 15 நாட்கள் நடத்தப்படும் துாய்மை பிரசாரத்தில், ரயில்வே சாரணர் இயக்கத்தினர், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu