சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குவியும் பாலியல் புகார்!
நாகராஜன்.
தமிழகத்தின் பிரபல தடகள பயிற்சியாளராக இருப்பவர் நாகராஜன். இவர் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை பாரிமுனையில் வைத்து நடத்தி வருகிறார். பல முன்னணி தடகள வீரர்களை உருவாக்கிய இவர் ஏழை மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 14,15 வயது என வித்தியாசமே இன்றி நாகராஜன் பாலியல் சீண்டல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
என்னுடைய ஜூனியரான 17 வயது பெண் என்னிடம் நாகராஜனின் பாலியல் தொல்லைகளை எடுத்துக் கூறினார். இதையடுத்து அவருக்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து பல பெண்களும் அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறினார்கள். எங்களுக்குப் போதுமான ஆதரவு கிடைக்காததாலும் இனி அது போல் செய்ய மாட்டேன் என நாகராஜன் உறுதியளித்ததாலும் நாங்கள் அவரை விட்டுவிட்டோம்.
அவர் பாலியல் சீண்டல்கள் கொடுத்தவர்கள் சிறப்பான அத்லெட்டுகள். இதிலிருந்து தப்ப அவர்கள் வேறு அகாதெமிக்கு செல்ல வேண்டும், இல்லாவிட்டால் விளையாட்டையே விட்டுவிட வேண்டிய சூழலுக்கு ஆளாகினர். கிராமத்து பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் தங்களை காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்பதால் அவர்கள் மீது நாகராஜன் குறிவைத்தார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் பார்த்திருக்கிறேன். பயிற்சி முடிந்த பின்னர் எல்லாரையும் அனுப்பிவிட்டு ஒரு பெண்ணை மட்டும் அவர் சொல்வதையெல்லாம் செய்ய வைப்பார். ஒரு நாள் அந்த பெண் அழுது கொண்டே என்னிடம் நடந்தவற்றை கூறினாள்.
நாகராஜனின் பாலியல் சீண்டல்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு தடகள சங்கத்தில் ஒரு அத்லெட்டின் தந்தை புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த புகார்களை நாகராஜன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 30 ஆண்டுகளாக கோச்சாக இருக்கும் நாகராஜன் ஆண்டுக்கு 2 முதல் 3 பெண்களை அவர்களது நடத்தைகளுக்காக வெளியே அனுப்பிவிடுவதாகவும் அவர்கள்தான் இது போன்ற பாலியல் புகார்களை எழுப்பியதாகவும் அந்த பெண் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu