மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை, குறிஞ்சி சிவகுமார் அறிவிப்பு

மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை, குறிஞ்சி சிவகுமார் அறிவிப்பு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார்.

மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் குறிஞ்சி என். சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

50 ஆண்டு கால அரசியல் அனுபவத்துடன் முதல்வர் எப்படி தமிழக அரசை வெளிப்படை தன்மையுடன் நடத்துகிறாரோ, அதேப்போன்று அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும்.

மேலும், மக்களுக்கு எளிய முறையில் மிகக் குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!