உதவி கலெக்டர்கள் 12 பேர் மாற்றம்...தமிழக அரசு அறிவிப்பு

உதவி கலெக்டர்கள் 12 பேர் மாற்றம்...தமிழக அரசு அறிவிப்பு
X
தமிழகத்தில் 12 உதவி கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 12 உதவி கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,

* கன்னியாகுமரி மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) ரிஷப், உதகை மண்டல உதவி கலெக்டராக நியமனம்

* திருவண்ணாமலை உதவி கலெக்டர் அமித்குமார், விருதாச்சலம் உதவி கலெக்டராகவும்,

* சேலம் மாவட்ட உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங், மேட்டூர் உதவி கலெக்டராகவும்,

* நாகப்பட்டினம் மாவட்ட உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி குன்னூர் உதவி கலெக்டராகவும்,

* திருச்சி மாவட்ட உதவி கலெக்டர் சித்ரா விஜயன் தர்மபுரி உதவி கலெக்டராகவும்,

* தஞ்சாவூர் உதவி கலெக்டர் அமித், திண்டிவனம் உதவி கலெக்டராகவும்,

* திருநெல்வேலி மாவட்ட உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை, திருப்பத்தூர் உதவி கலெக்டராகவும்,

* தேனி மாவட்ட உதவி கலெக்டர் தாக்ரே சுபம் நயந்தியாராவ், பொள்ளாச்சி துணை கலெக்டராகவும்,

* தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டர் பிரத்விராஜ், சிவகாசி உதவி கலெக்டராகவும்,

* அறந்தாங்கி துணை கலெக்டர் ஆனந்த் மோகன், தாராபுரம் துணை கலெக்டராகவும்,

* உதகை மண்டல துணை கலெக்டர் பெரியகுளம் துணை கலெக்டராகவும்,

* திருநெல்வேலி துணை கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி துணை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!