சிறப்பாக பணியாற்றிய நாய்களுக்கு பாராட்டு விழா: விமானத்தில் வழியனுப்பினர்

சிறப்பாக பணியாற்றிய நாய்களுக்கு பாராட்டு விழா: விமானத்தில் வழியனுப்பினர்
X

சென்னை விமானநிலைய வெடிகுண்டு சோதனை பிரிவில் பணியாற்றிய ராஜி மற்றும் பாதல் 2 மோப்ப நாய்கள் இன்றுடன் ஒய்வு அளிக்கப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை சார்பில் பாராட்டி வழியனுப்பும் விழா நடந்தது.



சென்னை விமானநிலையத்தின் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனா். வெடி பொருட்களையும், கடத்தல் பொருட்களையும் கண்காணித்து சோதனையிடுவது, விவிஐபி வருகைக்கு முன்னதாக அந்த பகுதிகளை பாதுகாப்பு சோதனையிடுவது போன்ற பாதுகாப்பு பணிகளுக்கு இந்த மோப்பநாய்கள் ஈடுபடும்.

சென்னை விமானநிலைய வெடிகுண்டு சோதனை பிரிவில் பணியாற்றிய ராஜி மற்றும் பாதல் 2 மோப்ப நாய்கள் இன்றுடன் ஒய்வு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதியதாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மோப்பநாய் பராமரிப்பு பிரிவிலிருந்து தேஜஸ், ப்ரூனோ, வெற்றி ஆகிய 3 நாய்களுக்கு நேற்று சென்னை விமானநிலையத்தில் வரவேற்பு நடந்தன.

ஓய்வு பெற்ற இரு மோப்ப நாய்களுக்கும் கேக் வெட்டியதுடன், பதக்கங்களையும், மாலைகளையும் அணிவித்து கவுரவித்த அதிகாரிகள், அந்த நாய்களுக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ்களையும் வழங்கினர். இரண்டு மோப்ப நாய்களையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் வாகனத்தில் ஏற்றி, மலர்கள் துாவப்பட்டு, அந்த வாகனத்தை வீரர்கள் கயிற்றால் இழுத்து வர, மோப்ப நாய்கள் இரண்டும் விமானநிலையத்தில் வலம் வந்தது.

சென்னை விமான நிலையத்தில் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்த மோப்ப நாய்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழா


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!