திருச்செந்தூர், திருத்தணி கோயிலில் அன்னதானம்: முதல்வர் துவக்கி வைத்தார்

திருச்செந்தூர், திருத்தணி கோயிலில் அன்னதானம்: முதல்வர் துவக்கி வைத்தார்
X

சென்னையில் இருந்தவாறே, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டத்தை,  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதானம் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள முக்கிய திருத்தலங்களான திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில், முழுநேர அன்னதானம் திட்டம் தொடங்கப்படும் என்று, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதானம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காலை 8,மணி முதல், இரவு 10,மணி வரை இம்மூன்று கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். இதன் மூலம் 7500, பேர் தினமும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future