தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
X

தலைமை செயலகம் (பைல் படம்)

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர் உத்தரவிட்டடுள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, இன்று அவர் வெளியிட்ட உத்தரவில்,

* ஆயுதப்படை (சென்னை) ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ் மூர்த்தி, சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருநெல்வேலி சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், காவலர் தேர்வு பள்ளி (தூத்துக்குடி) எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்ட்டாக இருந்த டி.பி.சுரேஷ் குமார், திருநெல்வேலி சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* காவலர் தேர்வு பள்ளி (தூத்துக்குடி) எஸ்.பி-யாக இருந்த எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!