ஜி.எஸ்.டி மின்னணு தாக்கல் செய்வதை எளிமையாக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா
ஏ.எம். விக்கிரமராஜா
ஜி.எஸ்.டி மின்னனு தாக்கல் முறையை எளிமையாகவும் ஒழுங்காகவும் செயல்படுத்த வில்லையெனில், லட்சக்கணக்கான வணிகர்களை ஒன்று திரட்டி மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஜி.எஸ்.டி யின் அடிப்படை நோக்கத்தை கேலிக் கூத்தாக் கும் இன்போசிஸ் மென்பொருள் குளறுபடியக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மேலும் பேசியதாவது: உள்ளீட்டு வரி வரவுக்கு தடங்கலாக இருக்கும் இன்போசிஸ் மென்பொருள் குளறுபடி உள்ளிட்ட அனைத்து போர்ட்டல் இடர்பாடுகளை உடனே சரிசெய்ய வேண்டும், வரி ஆலோசகர் மற்றும் கணக்கர் தொழிலை அங்கீகரிக்கும் வகையில் ஜி.எஸ்.டி பிராக்டி ஷனர் கவுன்சில் அமைத்திட வேண்டும், வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும் . ஜிஎஸ்டி குளறுபடிகளை சரிசெய்யாவிட்டால் வணிகர்களைத்திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஏ.எம்.. விக்கிரமராஜா.
சங்கத் தலைவர் முகமது அஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ,பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu