ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டியது

ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டியது
X

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் (பைல் படம்)

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் ஆளுநர் உரையை வரவேற்று பாராட்டினார்.

ஆளுநர் உரை அனைவரும் மதிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது. இந்த உரை புதிய நம்பிக்கையையும், புதிய வெளிச்சத்தைத் தருகிறது.

இந்தியாவிற்கு வெளிச்சம் தரும் வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் முதலமைச்சர் அவர்களுக்கு சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள்.

உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்திய அளவில் கவன ஈர்ப்பை பெறுகிற வகையில் இந்தியாவிற்கு வெளிச்சத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம். கூடுதலாக இன்னும் சில அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் கூட்டத் தொடர்களில் வலியுறுத்துவோம்

ஏற்கனவே தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோருக்கு மாநில அளவில் தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அரசின் கவனத்தை ஈர்க்க செய்வோம்

நிச்சயமாக அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படுகிறது என்பதை ஆளுநர் உரை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையிலான அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் முழுமையான ஆதரவை எப்போதும் தரும்.

மாநில உரிமைகளில் கவனம் செலுத்துவதைப் போலவே குடியுரிமை திருத்தச்சட்டம் புதிய கல்விக் கொள்கையை ஆகிய கொள்கைகளில் மாநில அரசு தன்னுடைய உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மாநில அரசின் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகளின் ஒத்துழைத்து இருக்கும்.

இந்த ஆளுநர் உரை புதிய நம்பிக்கையையும் புதிய வெளிச்சத்தையும் தருகிறது ஒன்றிய அரசு என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது மன நிறைவை தருகிறது இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்