விமானத்தில் தங்கம் கடத்தல்

விமானத்தில் தங்கம் கடத்தல்
X
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.12.21 லட்சம் மதிப்புடைய 251 கிராம் தங்கம் கடத்தல், திருச்சியை சோ்ந்த பயணி கைது.

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா விமானம் இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது திருச்சியை சோ்ந்த மதிவல்லபன் கருணாமூா்த்தி(23) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா் துபாயிலிருந்து வீடுகளை சுத்தம் செய்யும் (வேக்கும் கிளிநா்) என்ற கருவியை வாங்கி வந்திருந்தார். சுங்கத்துறையினா், அந்த கருவியை கழற்றி பார்த்து சோதித்தனா். அதனுள் தங்கக்கட்டி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதன் எடை 251 கிராம். சா்வதேச மதிப்பு ரூ.12.21லட்சம். இதையடுத்து தங்கக்கட்டியை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், கடத்தல் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!