விமானத்தின் கழிவறையில் ரூ.65.38 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை வந்த விமானத்தில் ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
துபைலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக்கூடும் என்று உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபைலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கடைசி இரண்டு கழிவறைகளில் வெள்ளை நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருப்பது தெரியவந்தது.
அதைப் பிரித்துப் பார்த்த போது, 583 கிராம் எடையில் வெளிநாட்டு முத்திரைகளுடன் 10 தங்க வெட்டுத் துண்டுகளும், 870 கிராம் எடையில் தங்கப்பசை அடங்கிய 6 பொட்டலங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக ரூ. 65.38 லட்சம் மதிப்பில் 1.36 கிலோ தங்கம், கேட்பாரற்று இருந்ததாக சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu