சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்

எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணியருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணியருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. விம்கோ நகர், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், போர்டிஸ் மருத்துவமனையும் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இந்த முகாமில், 10 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினரால், மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சர்க்கரை, வெப்பநிலை, இதய துடிப்பு, உடல் எடை சோதனை மேற்கொள்ளப்பட்டு, பொது மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.தியாகராயா கல்லுாரி, கிண்டி மெட்ரோ நிலையங்களில் நாளையும், புதுவண்ணாரப்பேட்டை, வடபழனி மெட்ரோ நிலையங்களில் வரும் 27ம் தேதியும், அரசினர் தோட்டம், திருமங்கலம் நிலையங்களில், 29ம் தேதியும், இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!