சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை: 4 அடுக்கு பாதுகாப்பு!

சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை: 4 அடுக்கு பாதுகாப்பு!
X
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் நாளை எண்ணப்பட உள்ளது. இதனால் இந்த மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.

ஆகவே சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாள் என்பதால் ஊரடங்கு கண்காணிப்பில் 7000 காவலர்கள் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!