பிறந்த நாளில் உயிரிழந்த திமுக முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ஆ.ராஜா
Veerapandi Arumugam Son
Veerapandi Arumugam Son-திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா(58) சேலத்தில் காலமானார். தனது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலைக்கு மாலை அணிவிக்க புறப்படும் போது எற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
மறைந்த திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் வீரபாண்டி ஆ.ராஜா (எ) ஆ.ராஜேந்திரன் (59). சேலம் அடுத்த வீரபாண்டி அருகே பூலாவாரியைச் சேர்ந்தவர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மலர் விழி, கிருத்திகா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக பதவி வகித்து வந்தார். 1962 அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த வீரபாண்டி ஆ.ராஜா, தனது தனது பிறந்தநாளை சனிக்கிழமை காலை கொண்டாடும் விதமாக தந்தை வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் படத்துக்கு மாலை அணிவித்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை, அவரது உறவினர்கள் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் வீரபாண்டி ஆ.ராஜா. கடந்த 2006 தேர்தலில் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அமைச்சராக இருந்தார். இவர் எம்எல்ஏவாக இருந்தார். 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதைத்தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த நிலையில், தேர்தல் பணிக்குழு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். வீரபாண்டி ஆ.ராஜா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu