சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய தடை

சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய தடை
X
கடந்த ஆண்டு கொரோனாவினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து, வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட மருத்துவா் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை மாநகராட்சி தொடர்ந்த வழக்கில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது தேவையா? என்பதை பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியது.

சென்னை மாநகராட்சி அளித்த விளக்கத்தை ஏற்று, உயர் நீதிமன்றம் மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய இன்று தடை விதித்துள்ளது.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா