சென்னை கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு தடையா ..?

சென்னை கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு   தடையா ..?
X

சென்னையில் கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னை பாலவாக்கத்தில் நிருபர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கொரோனா அறிகுறி இருந்தால் எந்தவித சங்கடமும் இல்லாமல் உடனே தெரிவிக்க வேண்டும். அது தொடர்பாக சிகிச்சை அளிக்கப்படும் போது உயிரிழப்பை நம்மால் தவிர்க்க முடியும்.

மேலும் கடற்கரைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஆலோசனை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். காலையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!