சென்னையில் விமான சேவை அதிகரிப்பு: பயணிகள் எண்ணிக்கையும் உயர்வு

சென்னையில் விமான சேவை அதிகரிப்பு: பயணிகள் எண்ணிக்கையும் உயர்வு
X

கோப்பு படம்

சென்னையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில், கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்தது, கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நாடு முழுவதும் உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீதம் பயணிகளுடன் விமானங்களை இயக்க, மத்தியசிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.

இதையடுத்து, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயணம் செய்வோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நீண்ட மாதங்களுக்கு பின், 30 ஆயிரம் பயணிகள் விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுஹாத்தி, பெங்களூரு மற்றும் கோவை விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!